காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-07-22 12:12 GMT
மன்னார்குடி,

தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஜனநாயக சீர்த்திருத்த சங்க நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மன்னார்குடி கிளை தலைவர் ஞானசேகரன், செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில அலுவலக செயலாளர் சரவணன் வரவேற்றார். இதில் மாநில இணை செயலாளர் ராஜூ, மாநில துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், மாநில பொருளாளர் வெங்கடேசன், மாநில அமைப்பு செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில், காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். பழங்குடியினர்களுக்கென தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படவேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். வருகிற ஆகஸ்டு மாதம் 9-ந்தேதியை பழங்குடியினர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. முடிவில் பழனி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்