50 மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்

50 மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்

Update: 2021-07-22 15:35 GMT
கோவை

தமிழகத்தில் கண் பார்வை மற்றும் செவித்திறன் பாதிப்பு உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுயதொழில் செய்வோர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு செல்போன் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. 

இதில், கண்பார்வை பாதிப்பு உடைய வர்கள் வாய்ஸ் ஓவர் மூலமும், செவித்திறன் பாதிப்பு உடையவர்கள் மெசேஜ், வீடியோ கால் மூலம் மற்றவர்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள். 

இதன்படி கோவை மாவட்டத்தில் செவித்திறன் மற்றும் கண் பார்வை பாதிப்பு உள்ளகளுக்கு கலெக்டர் தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், கண்பார்வை பாதிப்பு உள்ள 105 பேருக்கு ஏற்கனவே செல்போன் வழங்கப்பட்டது.


இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் செவித்திறன் பாதிப்பு உள்ள 50 பேருக்கு நேற்று செல்போன் வழங்கப்பட்டது. 

அதை மாற்றுத்திறன் நல அலுவலர் வசந்தன் ராம்குமார் வழங்கினார். மற்றவர்களுக்கு ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்னதாக செல்போன் வாங்க வந்த மாற்றுத்திறனாளிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்