நட்சத்திர ஏரிச்சாலையில் கழிவுகளால் துர்நாற்றம்

கொடைக்கானல் நட்சத்திர ஏரிச்சாலையில் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2021-07-22 16:49 GMT
கொடைக்கானல்: 


மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மையப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக களைச் செடிகள் மற்றும் நீர்த்தாவரங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. 

இதனால் ஏரி மாசு அடைந்து வருகிறது. இதை தொடர்ந்து ஏரியில் வளர்ந்து உள்ள நீர்த்தாவரங்களை தூய்மை பணியாளர்கள் மூலம் நகராட்சி நிர்வாகம் அகற்றும் பணி நடந்து வருகிறது. 

அவ்வாறு அகற்றப்படும் கழிவுகள் ஏரிச்சாலையில் நடைமேடையில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. 

அதிகாலையில் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே ஏரிச்சாலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்