கொரோனாவுக்கு பெண் பலி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலியாகியுள்ளார். மேலும் புதிதாக 74 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-22 17:08 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 59 ஆயிரத்து 750 பேர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 58 ஆயிரத்து 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில், 802 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 74 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களில் கர்நாடகா மற்றும் தூத்துக்குடியில் இருந்து கடலூர் வந்த 3 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 60 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 59 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.

பெண் பலி

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பரங்கிப்பேட்டையை சேர்ந்த 59 வயது பெண், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நேற்று மட்டும் 83 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 58 ஆயிரத்து 100 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 89 பேர் பிற மாவட்டங்களில் உள்ள பிற மருத்துவமனைகளிலும், 832 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்