குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி

குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி

Update: 2021-07-22 18:15 GMT
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான மோர்குளம், மேலதில்லையேந்தல், கீழ தில்லையேந்தல், பிளாதோப்பு, முனீஸ்வரம், சின்னபாளையேந்தல், மருதன் தோப்பு உள்பட 19-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு குடிநீருக்காக பதிக்கப்பட்ட குழாய்கள் மேட்டு பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பலர் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழக்கரை துணை மின் நிலையம் அருகில் உள்ள குழாய்களில் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். 
இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் சிலர் இரவும் பகலுமாக தூக்கமின்றி காத்து கிடக்கின்றனர். இதனால் அதிக போக்குவரத்து உள்ள கிழக்கு கடற்கரை சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். 
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மருதன் தோப்பு சமூக ஆர்வலர் பூபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்