வந்தவாசி போலீஸ் நிலையம் முற்றுகை

வந்தவாசி போலீஸ் நிலையத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-22 18:44 GMT
வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு த.மு.மு.க.வை சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு தரப்பினரை மட்டும் கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்ய சென்றுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர், தங்களை போலீசார் அச்சுறுத்துவதாக கூறி வந்தவாசி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்ட தலைவர் ஜமால், நகர செயலாளர் ரபி, த.மு.மு.க. நகர செயலாளர் ஜீலானி, அக்பர், சதாம் உசேன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அவர்களுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

மேலும் செய்திகள்