குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2021-07-22 21:54 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சியை சேர்ந்த ஈச்சங்காடு மலைப்பகுதியில் பில்லாலியான் குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. மழைக்காலங்களில் இந்த குளத்தில் மழைநீர் சேகரிப்பு காரணமாக, அருகில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் மூலம் சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடையும். ஆடு, மாடுகளுக்கு குடிநீராகவும், அவற்றை குளிப்பாட்டவும் குளத்து நீர் பயன்பட்டது. ஆனால் இந்த குளத்தை சுற்றிலும் விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், நிலத்தின் நிலப்பரப்பு தற்போது 10 சென்டாக குறைந்துள்ளது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பெரியசாமி, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி ஆலத்தூர் தாசில்தார் அருளானந்தம், செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன், கிராம நிர்வாக அதிகாரி நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் குளத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்