இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக பணம் வசூல்

இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக பணம் வசூல்

Update: 2021-07-23 12:57 GMT
தாராபுரம்
தாராபுரம் போலீஸ் நிலையத்தில்  காமராஜபுரம் பகுதி பொதுமக்கள் ஒரு  புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது
தாராபுரம் பகுதியை சேர்ந்த  40 வயது பெண் ஒருவர்  கடந்த 10 ஆண்டுகளாக தாராபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் ஆகியவை பெற்று தருவதாக  பணம் வசூல் செய்து வருவது வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் காமராஜபுரம் அருகே சில மாதங்களாக குடும்பத்துடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதி மக்களிடையே நெருக்கமான உறவு வைத்துக்கொண்டு நான் ஒரு சமூக சேவகியாக உள்ளேன். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கத்தில் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். அதனைத் நம்பிய அப்பகுதி பொதுமக்கள் ரூ. 20ஆயிரம் முதல் ரூ50ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். 
பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த பெண், இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தராமல் 6  மாத காலமாக காலம் தாழ்த்தி வந்தார். இதில் சந்தேகமடைந்த காமராஜபுரம் பகுதி மக்கள் நேரிலும், செல்போன் மூலமாகவும் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு  கேட்டுள்ளனர். அதற்கு அவர் எந்த பதிலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்