இளம்பெண்ணை மருத்துவமனையில் நேரில் சந்தித்து கலெக்டர் ஆறுதல்

உடல்நல பாதிப்பால் வாய்பேசாமல் போன இளம்பெண்ணை மருத்துவமனையில் நேரில் சந்தித்து கலெக்டர் ஆறுதல் கூறினார்.

Update: 2021-07-24 18:19 GMT
கரூர்
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் கண்மணி (வயது 20). இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்து தவறி கீழே விழுந்த நிலையில் பேச்சு வரவில்லை மற்றும் கைகள் சரிவர இயங்காத நிலையில் உள்ளார். இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மருத்துவமனைக்கு சென்று கண்மணியை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், உயர்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யலாம் என மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தார். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என கூறி, ஒரு சீட்டில் தனது செல்நம்பரை எழுதி கலெக்டர் அந்த பெண்ணிடம் கொடுத்தார். அப்போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், துணை முதல்வர் வேங்கடகிருஷ்ணன், மருத்துக்கல்லூரி கண்காணிப்பாளர் தெய்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்