இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மனு

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2021-07-26 14:49 GMT
திண்டுக்கல்:

ஒட்டன்சத்திரம் தாலுகா கூத்தம்பூண்டி ஊராட்சியில் உள்ள மோதுபட்டியை சேர்ந்த மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும்படி கேட்டு மனு கொடுத்தனர்.

 இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் சம்பளத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீடு கட்டி வசிக்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும் ஏழ்மை காரணத்தால் ஒரே வீட்டில் 3 குடும்பத்தினர் வசிக்கிறோம். எனவே எங்களுக்கு அரசு இலவசமாக வீட்டு மனை வழங்க வேண்டும், என்றனர்.

இதேபோல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 7 பேர் கொடுத்த மனுவில், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துணை தலைவராக இருந்த அன்னகாமாட்சி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து சிறப்பு கூட்டம் நடத்தி புதிய துணைத் தலைவரை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்