விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிடக்கோரி திருவாரூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்

Update: 2021-07-26 17:48 GMT
திருவாரூர், ஜூலை.27-
மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிடக்கோரி திருவாரூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள்  அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர் 
மேகதாது அணை
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும்,  மத்திய அரசின் முறையான அனுமதி பெறாமல் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்படும் என அறிவித்துள்ளது. இதை கண்டித்தும், மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 
அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நிர்வாகிகள் செல்வராஜ், முருகையன், ஜோசப், ராவணன், நாகராஜன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
தரையில் அமர்ந்து போராட்டம்
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது கலெக்டர் இல்லாததால் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்