விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அபராதம்

விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-07-26 20:14 GMT
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா?, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா?, அரசு விதிமுறைகளை கடைக்காரர்கள் முறையாக பின்பற்றுகின்றனரா? என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைவீதிகளில் உள்ள கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 முதல் ரூ.1000 வரை என மொத்தம் ரூ.4 ஆயிரமும், 11 வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் அணியாத வகையில் தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.2,200-ம் அபராதமாக விதிக்கப்பட்டது. கொரோனா மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய இந்த ஆய்வின்போது துணை தாசில்தார் சிவசக்தி, வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, வருவாய் உதவியாளர்கள் சரஸ்வதி, சந்துரு மற்றும் சம்பத் உள்ளிட்ட நகராட்சி அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். அவர்கள் வணிக நிறுவனத்தினர், கடைக்காரர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் கொரோனா மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்