தேயிலை தோட்டத்தில் தரைவழியாக செல்லும் மின்ஒயர்கள்

தேயிலை தோட்டத்தில் தரைவழியாக செல்லும் மின்ஒயர்கள்.

Update: 2021-07-26 22:44 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ளது, பாவியூர் பழங்குடியின கிராமம். இது அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளதால் காட்டுயானை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இங்கு ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை இறைப்பதற்காக மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தரை வழியாக பாதுகாப்பற்ற முறையில் ஒயர்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. 

இதனால் அந்த தேயிலை தோட்டத்தில் வனவிலங்குகள் நடமாடும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் உள்ளது. எனவே பாதுகாப்பான முறையில் மின் இணைப்புக்காக ஒயர்கள் கொண்டு செல்லப்படுவதை மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, இந்த புகார் குறித்து ஏற்கனவே பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளரையும் அறிவுறுத்தி உள்ளோம். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

மேலும் செய்திகள்