வக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

வக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாகூரில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார். நாகை மாவட்டம் நாகூரில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2021-07-27 11:02 GMT
நாகூர்,

தமிழகத்தில் லாட்டரி மீண்டும் கொண்டுவரப்படாது என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். நாகூருக்கு தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். நாகூரில் அடிப்படை வசதிகள் போதுமான அளவு செய்யப்படவில்லை. நாகூரை சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

நாகூர் அருகே உள்ள காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரியில் இருந்து வரக்கூடிய துகள்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது அ.தி.மு.க. அரசு வழக்கு போட்டுள்ளது.. இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல வக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்