வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் வைப்பு

வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் வைப்பு

Update: 2021-07-27 15:47 GMT
வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் வைப்பு
கோவை

கோவை மாநகரின் முக்கிய சாலைகளில்விபத்துகளை தடுக்கும் வகையில்  மாநகர எல்லைக்குட்பட்ட சாலைகளில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி காந்திபுரம் முதல் கணபதி வரையிலும், 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, பாரதியார் ரோடு, சுக்கிரவார்பேட்டை முதல் அவினாசி ரோடு மேம்பாலம் வரையிலும், வைசியாள் வீதி முதல் செல்வபுரம் வரையிலும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்க வேண்டும் என்று வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

கோவை மாநகரில் உள்ள பிற சாலைகளில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு பலகைகளை ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, பங்கஜா மில்ரோடு, அவினாசி ரோடு உள்ளிட்ட சாலையோரங்களில் போக்குவரத்து போலீசார் வைத்து வருகின்றனர்.  
வேக கட்டுபாடுகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்