கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி வங்கி ஊழியர் பலி

கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி தெலுங்கானாவை சேர்ந்த வங்கி ஊழியர் பலியானார்.

Update: 2021-07-27 16:48 GMT
விழுப்புரம், 

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி ஸ்ரீராம் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சு       மணன்ராவ் போஸ்லே மகன் ரகுநந்தன் போஸ்லே (வயது 23). இவர் தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி ரகுநந்தன் போஸ்லே, தனது நண்பர்கள் சிலருடன் தெலுங்கானாவில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் அன்று மாலை புதுச்சேரி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.


கடலில் மூழ்கி பலி

அப்போது ரகுநந்தன் போஸ்லே திடீரென மாயமானார். அவரை அவரது நண்பர்கள் தேடியும் கிடைக்கவில்லை. ரகுநந்தன் போஸ்லேவை கடல் அலை இழுத்துச்சென்றது தெரியவந்தது. 

உடனே இதுகுறித்து ரகுநந்தன் போஸ்லேவின் நண்பர்கள், புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும் மற்றும் கடலோர காவல்படையினரும் விரைந்து சென்று மீனவர்கள் உதவியுடன் ரகுநந்தன் போஸ்லேவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்         தினம் மாலை கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திராயன்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் ரகுநந்தன் போஸ்லேவின் உடல் கரை ஒதுங்கியது.

 இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்