வால்பாறை பொள்ளாச்சி இடையே மலைப்பாதையை ஆக்கிரமிக்கும் புதர்களால் பாதிப்பு

வால்பாறை-பொள்ளாச்சி இடையே மலைப்பாதையை ஆக்கிர மிக்கும் புதர்களால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அதை உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-07-27 17:23 GMT
வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி இடையே மலைப்பாதையை ஆக்கிர மிக்கும் புதர்களால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அதை உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். 

மலைப்பாதை 

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்ல ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் இருந்து தொடங்கி, வால்பாறை நகர் பகுதிவரை உள்ளது. 40 கொண்டை ஊசி வளைவை கொண்டது ஆகும். 

இந்த சாலையில் குரங்கு அருவி பகுதியில் இருந்து சாலையின் இருபுறத்திலும் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு வளைவிலும் 5 அடி வரை புதர்கள் வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. 

வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் 

குறிப்பாக இருசக்கர வாகனங்கள் வருவது முற்றிலும் தெரிவது இல்லை. புதர் செடிகள் உள்ள வளைவுகளை தாண்டி வாகனங் கள் வந்த பிறகு தான் எதிரே வரும் வாகனங்கள் தெரிகிறது. 

இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு நேரத்தில் இந்த மலைப்பாதையில் வாகனங்கள் செல்வது மிகவும் குறைவாக இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கடும் அவதி 

இதன் காரணமாக மலைப்பாதையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிரித்து விட்டது. இது ஒருபுறம் இருக்க சாலை யோரத்தில் ஆக்கிரமித்து இருக்கும் புதர்களால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகிறார்கள். 

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- 

வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மலைப் பாதையில் வாகனங்களை இயக்கும் முறை சரியாக தெரிவது இல்லை. இதனால் அவர்கள் சாலைவிதிகளை சரிவர கடைபிடிப்பது கிடையாது. 

அகற்ற வேண்டும் 

இதன்காரணமாக இந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள், சரக்கு லாரிகளை ஓட்டி வருபவர்கள் இந்த மலைப்பாதையில் செல்ல கடும் சவாலாகவே இருக்கிறது. 

இதற்கிடையே சாலை ஓரத்தில் புதர்கள் அதிகமாக வளர்ந்து இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மலைப்பாதையில் சாலையை ஆக்கிரமித்து உள்ள புதர்களை உடனடியாக  அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்