நிக்கோடின் கலந்த பொருட்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து

நிக்கோடின் கலந்த பொருட்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி எச்சரித்தார்.

Update: 2021-07-27 20:27 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தனியார் கூட்டரங்கில் உணவக வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கவிக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கும் நிக்கோடின் கலந்த பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மீறினால், அப்பொருட்களை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து விதிமுறையை மீறும் வணிக நிறுவனங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த கடை, நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும், என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மக்கள் நலன் கருதி அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என்று வணிகர்கள் உறுதிமொழி ஏற்றனர். முகாமில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் சண்முகநாதன், செயலாளர் இளங்கோவன் உள்பட வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்