சின்ன வெங்காய விதை திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

சின்ன வெங்காய விதை திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-30 20:52 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக வயலில் பட்டறை போட்டு அடுத்த விதைப்புக்கான விதைகளை விவசாயிகள் சேகரித்து வைப்பார்கள். ஆனால் அப்பகுதியில் அடிக்கடி வெங்காய திருட்டு நடைபெற்று வந்தது. அப்பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அவர், மதுரை பகுதியை சேர்ந்த சரவண பாண்டியன்(வயது 34) என்பதும், அவர் கூத்தனூர் கிராமத்தில் இருந்து வெங்காய விதைகளை திருடி, சரக்கு ஆட்டோவில் ஏற்றிச்சென்று சந்தையில் விற்பதை வழக்கமாக கொண்டிருந்ததும், இதன்படி பல இடங்களில் சின்ன வெங்காய விதை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து, சரவண பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்