கொரோனாவுக்கு ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். புதிதாக 22 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-07-31 16:53 GMT
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். புதிதாக 22 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

22 பேருக்கு தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 344 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதுள்ள ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

முககவசம் அவசியம்

தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அதோடு பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடை பிடித்து அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
அப்போது தான் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.
அதோடு தடுப்பூசி போட்டு கொள்வது மிகவும் சிறந்தது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாலும் முககவசம் அணிவது கட்டாயம். முககவசமே உயிர்கவசம் என்பதை அனைவரும் உணர்ந்து கொரோனாவில் இருந்து விடுபட முககவசத்தை அணியுங்கள். கொரோனாவை வெல்லுங்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்