வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் அறநிலையத்துறை நடவடிக்கை.

Update: 2021-08-03 09:54 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி சென்னை வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த மாதம் 31-ந்தேதி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கோவில் முன்புறம், தெப்பக்குளம் மற்றும் தேரை சுற்றிலும் சிலர் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை அமைச்சர் கண்டறிந்தார். அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அறநிலையத்றை அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

அதன்படி நேற்று கோவில் முன்புறம் மற்றும் தெப்பக்குளம், தேர் என கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் மூலம் வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்