தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியீடு

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறார்.

Update: 2021-08-04 08:58 GMT
சென்னை

தமிழக அரசின் பட்ஜெட்  வரும் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் நிதிநிலை பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்தத் தகவலை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இன்று தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக தமிழக அரசின் பட்ஜெட்  ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து 120 பக்க வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரும் 9ஆம் தேதி வெளியிடுகிறார்.

தமிழக அரசுக்கு இருக்கும் கடன் விவரங்கள், வருவாய் இழப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் அனைத்தும் இந்த வெள்ளையறிக்கையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்