உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தேவகோட்டை அருகே படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-04 17:47 GMT
தேவகோட்டை, ஆக
தேவகோட்டை அருகே படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடப்பிரச்சினையில் கொலை
தேவகோட்டை அருகே உள்ள தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (வயது 47). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். செல்வராஜின் தம்பி சேகர். இவரது மகன் பாலா (19). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வராஜ் குடும்பத்திற்கும், சேகர் குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மீனாட்சி தேவகோட்டை செல்வதற்காக பஸ் ஏற வந்தபோது பாலா அவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தார். 
பின்னர் அவர் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போராட்டம்
இதனிடையே மீனாட்சியின் கணவர் செல்வராஜ் மற்றும் உறவினர்கள் மீனாட்சியின் கொலையில் மேலும் பலர் மீது சந்தேகம் இருக்கிறது, அவர்களையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து அவர்கள் நேற்று காலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அதன் பின்னர் அவரது உறவினர்கள் சமரசம் ஆகி மாைலயில் மீனாட்சியின் உடலை பெற்றுச் சென்றனர்.

மேலும் செய்திகள்