இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தர்ணா

பயணிகள் நிழற்குடை அமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-04 19:01 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் -பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது கோ.பொன்னேரி, மும்முடிச்சோழகன், கத்தாழை, கரைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து சில இடங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடைகள் கட்டப்பட்டது. ஆனால் பொன்னேரி, மும்முடி சோழகன், கத்தாழை, கரைமேடு ஆகிய கிராமங்களில் மட்டும் இதுவரை பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதியில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் தலைமையில் விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் எண் 2-ல் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் வட்ட தலைவர் பரமசிவம், கிளை செயலாளர்கள் வேல்முருகன், தமிழ்மணி, விஜய், விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் வீரமணி, கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து, பயணிகள் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்