சிக்கமகளூரு-யஷ்வந்தபுரம் இடையே 9-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் இயக்கம்

16 மாதங்களுக்கு பிறகு சிக்கமகளூரு-யஷ்வந்தபுரம் இடையே 9-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் இயக்கப்பட உள்ளது.

Update: 2021-08-04 21:42 GMT
சிக்கமகளூரு: 16 மாதங்களுக்கு பிறகு சிக்கமகளூரு-யஷ்வந்தபுரம் இடையே 9-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் இயக்கப்பட உள்ளது. 

 ரெயில் சேவை நிறுத்தம்

சிக்கமகளூரு டவுன் இரேமகளூரு ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு யஷ்வந்தபுரம், சிவமொக்காவுக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் முதல் சிக்கமகளூருவில் இருந்து யஷ்வந்தபுரம் மற்றும் சிவமொக்காவுக்கு ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதுமுதல் கடந்த 16 மாதங்களுக்கு மேலாகியும் சிக்கமகளூருவில் இருந்து பெங்களூரு, சிவமொக்காவுக்கு ரெயில் சேவை தொடங்கபடாமல் இருந்து வந்தது.

 இதனால் சிக்கமகளூருவில் இருந்து பெங்களூரு, சிவமொக்கா சென்று வரும் பயணிகள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வந்தனர். மேலும் மீண்டும் சிக்கமகளூருவில் இருந்து பெங்களூரு, சிவமொக்காவுக்கு ரெயில் சேவை தொடங்கும்படி கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சிக்கமகளூருவில் இருந்து யஷ்வந்தபுரம் சிவமொக்காவுக்கு வரும் 9-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் ரெயில் சேவை தொடங்குவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சிக்கமகளூரு-பெங்களூரு யஷ்வந்தபுரம்

அதன்படி, சிக்கமகளூரு-சிவமொக்கா பயணிகள் ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் சிக்கமகளூருவில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு, சிவமொக்கா ரெயில் நிலையத்திற்கு காலை 9.40 மணிக்கு சென்றடையும். அதேபோல் சிவமொக்காவில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, சிக்கமகளூரு ரெயில் நிலையத்திற்கு இரவு 9.55 மணிக்கு வந்தடையும். 
இதபோல் சிக்கமகளூரு- யஷ்வந்தபுரம் ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் சிக்கமகளூருவில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2 மணிக்கு சென்றடையும். அதேபோல் பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, சிக்கமகளூரு ரெயில் நிலையத்திற்கு இரவு 9 மணிக்கு வந்தடையும்.
மேற்கண்ட ரெயில்களில் பயணிப்பவர்கள் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளும்படி தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்