ரூ.7½ லட்சத்துடன் நடன ஆசிரியை தலைமறைவு. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார்

ரூ.7½ லட்சத்துடன் நடன ஆசிரியை தலைமறைவு

Update: 2021-08-05 17:00 GMT
வேலூர்

வேலூர் பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்தவர் கீதா. இவர் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், தொரப்பாடி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் நடன ஆசிரியை ஒருவரும் கடந்த 13 ஆண்டுகளாக தோழியாக பழகி வந்தோம். நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மாத சீட்டு செலுத்தி வந்தேன். இதேபோன்று அந்த ஆசிரியையும் தன்னையும் சேர்க்குமாறு கூறினார். நானும் அவருக்கு சிபாரிசு செய்து சேர்த்து விட்டேன். அவர் 3 சீட்டுகள் கட்டி வந்தார். சில மாதங்கள் மட்டுமே பணம் செலுத்தி ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றார். பின்னர் அவர் தவணையை செலுத்தாமல் தலைமறைவாகி விட்டார். அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. 

அவருடைய கணவரை தொடர்பு கொண்டு கேட்டபோது சரிவரபதில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை நான்தான் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்