மேலும் 11 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 981 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 10 பேர் நேற்று குணமாகினர். தற்போது 142 பேர் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.