சென்னையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் எத்தனை பேர்? கணக்கெடுக்கும் பணி 10-ந்தேதி தொடங்குகிறது

சென்னையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் எத்தனை பேர்? கணக்கெடுக்கும் பணி 10-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2021-08-06 13:12 GMT
சென்னை,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சென்னை மாவட்டம் 2021-22-ம் ஆண்டில் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற, இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் 1 முதல் 19 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

கொரோனா தொற்று அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்றி குடியிருப்பு வாரியாக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்பு பணியின் போது கொரோனா தொற்று காரணமாக பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது.

இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லாத, இடைநின்ற, இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இலவச கட்டாய கல்வி உரிமைசட்டம் 2009-ன்படி அருகில் உள்ள பள்ளிகளில் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.

மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் 9003267086, 7358281190 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்