போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணா

பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணாவில் ஈடுபட்டாா்.

Update: 2021-08-07 17:34 GMT
விழுப்புரம், 

விக்கிரவாண்டி தாலுகா தென்னவராயன்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரேசன் (வயது 26), அவரது மனைவி சாரதி, தாய் அஞ்சலாட்சி ஆகியோர் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குமரேசன் கூறுகையில், தென்னவராயன்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் எங்களுக்கு சொந்தமாக 3 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லக்கூடிய பொது வழிப்பாதையை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதுபற்றி அவர்களிடம் கேட்டதற்கு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் இருவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் 3 பேரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்