நவீன வசதியுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவை; அமைச்சர் நாசர் வழங்கினார்

சென்னை வில்லிவாக்கம், திருவேற்காடு, அயப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி ஆவடியில் நடைபெற்றது.

Update: 2021-08-08 11:37 GMT
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வாகனத்தை தானே இயக்கி பார்த்து சிறிது தூரம் ஓட்டிச்சென்று ஆய்வு செய்தார். பின்னர், அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன அமைப்பாளர் பாஸ்கர் பாபு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் 
லாவண்யா, தி.மு.க.திருவேற்காடு நகர செயலாளர் மூர்த்தி, வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை, வீரமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்