ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

Update: 2021-08-12 17:38 GMT
இளையான்குடி, ஆக
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் ஊராட்சியில் பஸ் நிலையம், கடைத்தெரு, அரசு மருத்துவமனை வளாகம் போன்ற பகுதிகளில் அரசு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பல தரப்பினரும் நீதிமன்றத்தை நாடி தடையாணை பெற்றதால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி இளையான்குடி தாசில்தார் ஆனந்த், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஊராட்சி மன்றம், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அரசு இடத்தில் கட்டி உள்ள அனைத்து கடைகளையும் இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாண்டி, அழகர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலைக்கிராமம் பஸ் நிலையத்தில் மழைநீர் செல்வதற்கு தகுந்த வடிகால்கள் இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையான வடிகால்களை அமைத்து நெடுஞ்சாலைத்துறையினர் பஸ் நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

மேலும் செய்திகள்