கண்ணங்குடி யூனியன் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்

தேவகோட்டை அருகே எம்.எல்.ஏ. உறவினரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வைரலானதை தொடர்ந்து கண்ணங்குடி யூனியன் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-08-12 17:42 GMT
தேவகோட்டை,ஆக
தேவகோட்டை அருகே எம்.எல்.ஏ. உறவினரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வைரலானதை தொடர்ந்து கண்ணங்குடி யூனியன் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
லஞ்சம் கேட்கும் ஆடியோ
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர்சீயராக பணியாற்றி வந்தவர் முத்துமாணிக்கம். இவர் ஊராட்சி திட்டப்பணிகளில் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதலங்களில் வைரல் ஆனது. அந்த ஆடியோவில் எதிர்முனையில் காண்டிராக்டர் கண்ணங்குடி ரமேஷ் பேசுகிறார்.
ரமேஷ் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கத்திற்கு உறவினர் ஆவார்.
எம்.எல்.ஏ. உறவினரிடமே ஓவர்சீயர் முத்துமாணிக்கம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி உள்ளது ஊரக வளர்ச்சித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணியிடை நீக்கம்
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விசாரணை நடத்தி கண்ணங்குடி யூனியன் ஓவர்சீயர் முத்துமாணிக்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்