திருநங்கைகளுக்கான நல வாரிய அடையாள அட்டை; கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டையில் திருநங்கைகளுக்கான நல வாரிய அடையாள அட்டையை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்.

Update: 2021-08-14 13:34 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான திருநங்கை அடையாள அட்டை, கொரோனா நிவாரண நிதி உதவி வழங்குதல் மற்றும் தடுப்பூசி போடும் முகாம் தொடக்க விழா ஆகியவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி, ஏற்கனவே அடையாள அட்டை வைத்துள்ள 74 பேருக்கு நிவாரண நிதியுதவி, 41 பேருக்கு திருநங்கைகள் அடையாள அட்டையை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார். முகாமில் 38 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், சமூகநலத்துறை கண்காணிப்பாளர் கீர்த்தி, சதீஷ், வட்டார விரிவாக்க அலுவலர் ராணி, பெண்கள் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சங்கரி, ரம்யா சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்