தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் பெண்கள்- பெண் குழந்தைகளுக்கு என்ன நடக்குமோ? ஜக்கி வாசுதேவ் கவலை

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் பெண்கள்- பெண் குழந்தைகளுக்கு என்ன நடக்குமோ? ஜக்கி வாசுதேவ் கவலை.

Update: 2021-08-17 05:40 GMT
சென்னை,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பெண்கள், பெண் குழந்தைகளுக்கு என்ன நடக்குமோ? என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு என்ன நடக்கும் என்று நினைத்து பார்த்தால், இதயத்தை பிளப்பதாக உள்ளது. உலகம் வெறும் பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. உலகத்தில் உள்ள பெரும்பான்மையான சக்திகள் தங்களுடைய செல்வாக்கையும், ஆற்றலையும் பயன்படுத்தி அவர்களுடைய துயரங்களை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்