சாராயம் விற்பதற்கு பாலித்தீன் பை வினியோகித்த மளிகை கடைக்கு சீல்

சின்னசேலத்தில் சாராயம் விற்பதற்கு பாலித்தீன் பை வினியோகித்த மளிகை கடைக்கு சீல்

Update: 2021-08-17 17:36 GMT
சின்னசேலம்

சின்னசேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் பாண்டியங்குப்பம், திம்மாபுரம், கல்லாநத்தம், தகரை, நாககுப்பம் ஆகிய கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தி சாராயம் விற்றவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் நடத்திய விசாரணையில் சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு தேவையான பாலித்தீன் பைகளை நாககுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மளிகைகடையில் வாங்கியதாக தெரிவித்தனர். 

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், கிராம நிர்வாக அலுவலர் ராமர்  மற்றும் வருவாய் ஊழியர்கள் நாககுப்பம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் ராஜேஷ்(வயது 36) என்பவரின் மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஏராளமான பாலிதீன் பைகள் இருந்தன, சாராயம் விற்பனைக்காக அவற்றை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த மளிகை கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

மேலும் செய்திகள்