மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்ைத போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-21 18:54 GMT
தளவாய்புரம், 
சேத்தூர் அருகே சாஸ்தா கோவில் அணைக்கட்டு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப் படுவதாக ராஜபாளையம் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் ராமச்சந்திரன் உத்தரவுபடி மண்டல துணை தாசில்தார் அப்பாதுரை தலைமையில் சேத்தூர் வருவாய் ஆய்வாளர் அமிர்தராஜ், கிராம உதவியாளர் ஆகியோர் சாஸ்தா கோவில் அணையின் தெற்கு புறம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணலுடன் டிராக்டர் ஒன்றும், பொக்லைன் எந்திரமும் வந்தது. இதனை அதிகாரிகள் மறித்தனர். அப்போது  டிரைவர்கள் வாகனங்களை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனங்கள் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்