திருவாரூரில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம்

திருவாரூரில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் வாகனத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-23 18:33 GMT
திருவாரூர்;
திருவாரூரில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் வாகனத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி வாகனம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.  விழாவுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
30 மருத்துவக்குழுக்கள்
அப்போது அவர் கூறியதாவது
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா முதற்கட்ட தடுப்பூசி 3 லட்சத்து 59 ஆயிரத்து 568 பேருக்கும், 2-ம் கட்ட தடுப்பூசி 55 ஆயிரத்து 421 பேருக்கும் போடப்பட்டுள்ளது. முகாம்கள் மற்றும் மருத்துவமனை வாயிலாகவும் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் இருப்பிடத்துக்கே தேடி சென்று தடுப்பூசி போடும் வகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 30 நடமாடும் மருத்துவக்குழு மூலம் 10 வட்டாரங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, ஒன்றியக்குழு தலைவர் தேவா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரகாஷ், உதவி திட்ட மேலாளர் ரெத்தினகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்