நாமக்கல்லில் மாவட்ட சமையல் போட்டி

நாமக்கல்லில் மாவட்ட சமையல் போட்டி

Update: 2021-08-25 16:41 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மாலா தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் ஒன்றியத்துக்கு 2 பேர் வீதம், 15 ஒன்றியங்களில் இருந்து 30 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் இயற்கை உணவு, அடுப்பு இல்லா சமையல், சிறு தானிய உணவு வகை என பல்வேறு உணவு வகைகளை தயாரித்து தங்கள் திறமையை பெண்கள் வெளிப்படுத்தினர். சிறந்த உணவு தயாரிப்பை மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்வர் எனவும், வெற்றி பெற்றவர்களுக்கு பின்னர் பரிசு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
======

மேலும் செய்திகள்