மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உதயமார்த்தாண்டபுரம் கிராம நிர்வாக அலுவலம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-08-27 16:46 GMT
முத்துப்பேட்டை:
உதயமார்த்தாண்டபுரம் கிராம நிர்வாக அலுவலம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் 
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முனியப்பன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். 
கோரிக்கை மனு 
50 சதவீதம் வரை உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 100 சதவீதம் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் நிர்வாக அலுவலர் அர்ஜுன் விவேகானந்தனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்