தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மறுவாழ்வு முகாம்

திருவள்ளூர் பெரியகுப்பம் டி.இ. எல்.சி நடுநிலைப்பள்ளியில் நேற்று தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊனத்தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம் நடைபெற்றது.

Update: 2021-08-28 10:42 GMT
இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊனத்தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி உபகரணங்களை வழங்கி கொரோனா தடுப்பூசிகள் போட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 150 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் அமுதா, குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், காச நோய் துணை இயக்குனர் டாக்டர் லட்சுமி முரளி, தொழுநோய் துணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஸ்ரீதேவி, மற்றும் தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்