ஆம்பூர் அருகே; ஓடும் பஸ்சில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆம்பூர் அருகே ஓடும் பஸ்சில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-08-28 18:19 GMT
ஆம்பூர்

வேலூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பள்ளிகொண்டா அருகே காலை 8.30 மணியளவில் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர் உமாபதி பஸ்சில் ஏறி ஓடும் பஸ்சில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தார்.

ஒருவரிடம் டிக்கெட்டை காட்டும்படி கேட்டார். மேலும் பயணி வைத்திருந்த பூட்டுப் போடப்பட்ட பெரிய பையை திறக்கும்படி கூறினார். அதற்கு பயணி, பூட்டின் சாவி தன்னிடம் இல்லை, தனது முதலாளியிடம் இருப்பதாக, தெரிவித்தார்.

டிக்கெட் பரிசோதகர் சந்தேகத்தின்பேரில் பயணிைய பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தார். பயணியிடம், துைண போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை நடத்தினார். அவர், வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பைரோஸ் என்ற முகமது கவுஸ் (வயது 42) என தெரியவந்தது. 

அவர் கொண்டு சென்ற பையில்  10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து முகமதுகவுஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்