சுற்றுலா பயணிகள் குவிந்ததால் களை கட்டிய ஏற்காடு

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஏற்காடு களை கட்டியது.

Update: 2021-08-29 21:29 GMT
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், கரடியூர் வியூ பாயிண்ட், ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனர். ஏற்காட்டில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதமான சூழல் நிலவியதால் சாலையோர கடைகளில் மிளகாய் பஜ்ஜி வாங்கி உண்டு மகிழ்ந்தனர். வெகு நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு வருமானம் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக வியாபாரிகள் உற்சாகமாக தெரிவித்தனர். மேலும் மாலையில் குளிரை அதிகரிக்கும் விதமாக சாரல் மழை பெய்தது. இந்த மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்தனர்.

மேலும் செய்திகள்