திருப்பூரில் மழை கொட்டித்தீர்த்தது. சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

திருப்பூரில் மழை கொட்டித்தீர்த்தது. சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Update: 2021-08-31 15:33 GMT
திருப்பூர், 
திருப்பூரில் மழை கொட்டித்தீர்த்தது. சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கொட்டி தீர்த்த மழை
திருப்பூர் மாநகரில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணி அளவில் தூறலுடன் மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு மழை கொட்டத்தொடங்கியது. சுமார் ½ மணி நேரமாக மழை கொட்டித்தீர்த்தது. 
இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்தது. ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலம் பகுதியில் தண்ணீர் அதிக அளவில் குளம்போல் தேங்கியது. இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். அதுபோல் டி.எம்.எப். சுரங்கப்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியது.
சேறும், சகதியுமான சாலைகள்
ஸ்ரீசக்தி தியேட்டர் பகுதியிலும் அதிக அளவு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோல் சாலைகளில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று பெய்த மழையால் சேறும், சகதியுமாக சாலைகள் காட்சியளித்தன. குண்டும், குழியுமான ரோட்டில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்