3 பேருக்கு கத்திக்குத்து

அருப்புக்கோட்டையில் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-31 21:05 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை உரக்காடத்தெருவில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் குமரையா (வயது 60).இவருடைய கடை எதிரே உடற்பயிற்சி கூடம் நடத்தி வருபவர் மதன்ராஜ் (30). இந்நிலையில் இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவர்கள் வாகனங்களை டைல்ஸ் கடை முன் நிறுத்தி வந்ததாகவும் இதனால் டைல்ஸ் கடையினருக்கும் உடற்பயிற்சி கூடத்தினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று வாகனங்களை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் டைல்ஸ் கடை உரிமையாளர் குமரையா, அவரது மகன் முனீஸ்வரன், கடை ஊழியர் பெருமாள் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் முனீஸ்வரன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் உடற்பயிற்சி கூட உரிமையாளர் மதன்ராஜ் (30) அவருடைய சகோதரர் தவமணி (45) மற்றும் மணிகண்ட மூர்த்தி (30), கார்த்திக் (37) ஆகிய 4 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்