நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

Update: 2021-09-04 18:25 GMT
நாமக்கல்:
பரவலாக மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மங்களபுரம் பகுதியில் 10 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சேந்தமங்கலம்-5, பரமத்திவேலூர்-5, ராசிபுரம்-4, கொல்லிமலை-4, நாமக்கல்-4, கலெக்டர் அலுவலகம்-3, புதுச்சத்திரம்-1.
நாமக்கல், சேந்தமங்கலம்
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலுக்கு மேல் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. மாலை 4.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சாரல்மழை பெய்தவாறு இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக வாகனத்தை ஓட்டி சென்றதை காண முடிந்தது.
இதேபோல் நேற்று மாலை சேந்தமங்கலத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் காந்திபுரத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவில் வளாகத்தில் மழை நீர் தேங்கி நின்றது.

மேலும் செய்திகள்