மணல் திருடிய 3 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-04 20:19 GMT
நெல்லை:
களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், களக்காடு பகுதியில் ரோந்து சென்றார். அப்போது சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்ட கருவேலங்குளத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 25), களக்காட்டை சேர்ந்த செல்வின் (27), ஆகிய இருவரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 2 யூனிட் குளத்து சரள் மண், டிரைலர், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கங்கைகொண்டான் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வெங்கடாசலபுரம்பட்டி அம்மன் கோவில் அருகே எவ்வித அரசு அனுமதியின்றி சிற்றாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்த வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த ராமர் (43) என்பவரை கைது செய்தார்.
மேலும் அவரிடம் இருந்து மணல் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்