கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி அரசு, வேம்பு மரத்திற்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி அரசு, வேம்பு மரத்திற்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-09-05 18:24 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மாரசமுத்திரம் ஊராட்சி, நெடுமருதி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகதேவதைகள், விநாயகர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி மற்றும் அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருமண நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை கங்கபூஜை, ஹோமமும், இரவு பிரதிஷ்டையும் நடைபெற்றது. நேற்று காலை ஹோமம், அபிஷேகம், ஆராதனை,  கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள், உலக நன்மை வேண்டியும், மழை பொழிந்து ஏரி, குளங்கள் நிரம்பவும், கொரோனா நோய் தாக்கம் முற்றிலும் நீங்கி மக்கள் நோய் நொடி இன்றி வாழவும் வேண்டியும் அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் இரு வீட்டாரும் சீர் வரிசைகளை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து, விநாயகர் மற்றும் நாக தேவதைக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்