மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-09-05 18:47 GMT
பெரம்பலூர்
மங்களமேடு
மங்களமேட்டை அடுத்துள்ள அகரம் சீகூர் வெள்ளாற்று பகுதியில் அடிக்கடி மாட்டு வண்டி மற்றும் டிப்பர் வண்டிகளில் ஆற்று மணல் திருடுவதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜ் உத்திரவின்படி அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிராம உதவியாளர் தேவேந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை அகரம்சீகூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அகரம்சீகூரை சேர்ந்த ரமேஷ்(40), ரெட்டி குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(65), சிதம்பரம்(58) ஆகியோர் 3 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு திட்டக்குடி-செந்துறை சாலையில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது சரவணன் மாட்டு வண்டிகளை மறித்தார். இதைக்கண்ட 3 பேரும் மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சரவணன் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்