கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி பறக்கும் டிரோன் கேமராக்கள்

கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி டிரோன் கேமராக்கள் பறக்க விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-09-08 17:12 GMT
கொடைக்கானல்: 

தமிழகத்தில் டிரோன் கேமராக்களை உரிய அனுமதியின்றி பறக்கவிட அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதி பாதுகாக்கபட்ட வனப்பகுதியாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாகும். கடந்த சில நாட்களாக வட்டக்கானல், சென்மேரிஸ்சாலை, வானிலை ஆராய்ச்சி நிலையம், நட்சத்திர ஏரி மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி டிரோன் கேமராக்கள் அடிக்கடி பறக்கவிடப்படுகிறது. 


கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வட்டமடிக்கும் இந்த டிரோன் கேமராக்கள் மூலம் சட்டவிரோதமாக  யாரேனும் கொடைக்கானலின் வளங்களை கண்காணிக்கின்றனரா? அல்லது முக்கிய பிரமுகர்களை கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 

எனவே அனுமதியின்றி டிரோன் கேமராக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்