பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் தற்கொலை

விருதுநகரில் பணியிடை நீக்கம் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-08 21:16 GMT
விருதுநகர், 
விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் பவுன் தாய் (வயது 42). அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையான இவரது கணவர் மலைராஜன் (45). இவர் திருப்பூரில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சாத்தூரில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  
அதன்பின்பு வீட்டில் இருந்து வந்த இவர், அவ்வப்போது திருப்பூர் சென்று வந்தார். விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படாத நிலையில் விடுதி உரிமையாளர்கள் போலீஸ் துணையுடன் அறையை திறந்து பார்த்தபோது, மலைராஜன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 
இதுபற்றி பவுன்தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்